நியாய விலைக் கடையில் அமைச்சர் திடீர் ஆய்வு
சென்னை, ஆக. 13: உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கட்ரமணன் அவர்கள், சென்னை கண்ணம்மாப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, விநியோகம் மற்றும் பதிவேடுகளை அமைச்சர் பார்வையிட்டார். பொதுமக்களுக்கு பொருட்கள் முறையாகவும் தட்டுப்பாடின்றியும் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருட்களின் தரம் மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தினார். — தொட்டா Third Eye செய்தி
