🔥 ‘அமரன்’ விவகாரம் மீண்டும் வெடிப்பு!
“திரைப்படக் காட்சியா? அரசியல் பார்வையா?” — நயினார் நாகேந்திரன் கேள்வி சென்னை, ஆக.30: மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘அமரன்’ திரைப்படம் தொடர்பான விவாதம் மீண்டும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. எஸ். மதார் பதுருதீன் (முஸ்தபா) திரைப்படம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ⚡ “ஒரு சமூகத்தை ஏன் இதில் கொண்டு வர வேண்டும்?” மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் பதிவு செய்யும் திரைப்படத்தில் இடம்பெறும் தீவிரவாதம் தொடர்பான காட்சிகளை, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரானதாகப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திரைப்படத்தில் பயங்கரவாதிகள் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதற்காக எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 🎯 விஜய்க்கும் நேரடி கேள்வி இந்த விவகாரத்தில் முஸ்தபாவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தா? அல்லது தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? என்பதை கட்சித் தலைவர் வ...
.jpg)