1. 543 மக்களவை தொகுதிகளை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் — பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை தற்போதுள்ள 543 என்ற எண்ணிக்கையிலேயே நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு தற்போது உள்ள தொகுதி ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் கடிதத்துடன் இணைத்துள்ள அவர், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை 543 தொகுதிகளின் தற்போதைய எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
Thotta Third Eye பார்வை:
தொகுதி மறுவரையறை விவகாரம் தற்போது தமிழக அரசியலில் மட்டுமல்லாமல், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பான முக்கிய தேசிய விவாதமாகவும் மாறியுள்ளது.
