சென்னையில் சித்தசபா மணிக்கூடம் 4ஆம் ஆண்டு விழா – மாபெரும் திருவாசக விண்ணப்பப் பெருவிழா
சென்னையில் சித்தசபா மணிக்கூடம் 4ஆம் ஆண்டு விழா – மாபெரும் திருவாசக விண்ணப்பப் பெருவிழா
https://www.facebook.com/share/r/19ZUHj4js9/
சென்னை: சைவ சமயத்தின் சிறப்பையும் திருவாசகத்தின் பெருமையையும் போற்றும் வகையில், சித்தசபா மணிக்கூடத்தின் நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் திருவாசக விண்ணப்பப் பெருவிழா நடைபெற உள்ளது.
30.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில், சென்னை அண்ணா சாலை, SS மஹால் பகுதியில் விழா நடைபெறுகிறது.
விழாவில் சித்தசபா நாயகி உடனாய சித்தசபா நாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க உள்ளார். மேலும், சைவ சமயத்தை முன்னிறுத்தும் வகையில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருவாசக விண்ணப்ப நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இந்நிகழ்வில் சைவ அன்பர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு இறையருளைப் பெறுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், “இல்லங்களில் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலை அமைப்போம்” என்ற நோக்கத்துடன் சைவ சமயப் பணிகளை முன்னெடுக்கவும் விழா மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
📅 தேதி: 30.08.2026 – ஞாயிற்றுக்கிழமை
⏰ நேரம்: மாலை 3 மணி முதல்
📍 இடம்: SS மஹால், சென்னை
– செய்தி: Thotta Third Eye